
தெற்கு லெபனானின் நபதியே மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
ஹிஸ்புல்லா அமைப்பு டிரோன்களை ஏவியதாகக் கூறி இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என லெபனான் குற்றம் சாட்டியுள்ளது.
தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம், முன்னாள் மேயரின் இல்லம் மற்றும் நிதி அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகம் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன.