
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நேற்று 19 போட்டியாளர்களுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இந்த முறை சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் 6 பேர் மற்றும் காமன்மேன் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற 3 பேர் உட்பட மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.
போட்டியாளர்கள் உள்ளே செல்வதற்கு மக்கள் வாக்களிக்கும் வகையில் இந்த சீசன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது முந்தைய சீசன்களை விட வித்தியாசமாக உள்ளது.