
மதுரை பாந்தர்ஸ் அணிக்காக விளையாடும் 18 வயது வேகப்பந்து வீச்சாளர் தீபேஷ், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிக்கு எதிரான போட்டியில் மணிக்கு 146 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார்.
நடப்பு டி.என்.பி.எல் தொடரில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள தீபேஷ், மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் தமிழக வீரர் வி. தேவேந்திரனின் மகனான தீபேஷ், தனது வேகத்தை அதிகரிக்க அதிக எண்ணிக்கையிலான பந்துகளை வீசி பயிற்சி மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.