
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் 57 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் 19 பேர் பங்கேற்றனர்.
அரசியலில் நிரந்தர எதிரி என்று யாரும் இல்லை என்றும், தமிழ்நாட்டுக்கு எது நல்லதோ அதை திமுக ஆதரிக்கும் என்றும் கனிமொழி சோமு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு அதிக நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகவும், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.