/nakkheeran/media/media_files/2026/10/05/224-2026-10-05-16-24-15.jpg)
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை போரூர் அருகே பரணிபுத்தூர் பகுதியில் தனது நற்பணி இயக்கத்தின் மாநில, மாவட்ட மற்றும் நகர அளவிலான கிட்டத்தட்ட 2,000 நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு விழாவின் விளம்பரப் பதாகைகள் ஒரு அரசியல் கட்சி மாநாட்டைப் போல வடிவமைக்கப்பட்டிருந்தது கவனம் பெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும், குடும்பத்தைப் பேண வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.