ஆந்திர மாநிலம் அமராவதியில் 8.5 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முதல் குவாண்டம் மற்றும் ஏஐ பல்கலைக்கழகத்தை அமைக்க ரூ.730.70 கோடி மத்திய மானியத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளில் 8,250 பேருக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில், 500 படுக்கைகள் கொண்ட விடுதி வசதி மற்றும் குவாண்டம் ஆய்வு மையம் அமையும்.
முதற்கட்ட வகுப்புகள் வரும் செப்டம்பரில் குண்டூரில் உள்ள ஆச்சார்ய நாகார்ஜுனா பல்கலைக்கழக தற்காலிக வளாகத்தில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.