
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரவும், தேர்தல் செலவுகளை அவர்களிடம் வசூலிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயகுமார், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக பதவியை ராஜினாமா செய்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவர்களது ராஜினாமாவால் அரசுகளுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் தேவையற்ற பளுவும் பண விரயமும் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர் எஸ்.காசி ராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.