
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஏற்பாட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதும் நட்பு ரீதியான கிரிக்கெட் தொடர் புதுச்சேரி துத்திப்பட்டு சி.ஏ.பி. கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் அடுத்த மாதம் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
ஆஸ்திரேலியா ஏ அணி பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடருக்கான தயாரிப்பாக 12 மாதங்களில் இரண்டாவது முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.