
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நடைபெறும் பாய்மரப் படகுப் போட்டியை மையமாகக் கொண்ட இப்படத்தில், மகிமா நம்பியார் கதாநாயகியாகவும், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில், படகுப் போட்டியின் கேப்டனான 'மண்டாடி' கதாபாத்திரத்தில் சூரி புதிய பரிமாணத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.