
கொலம்பியாவின் நோர்டே டி சாண்டாண்டர் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தேசிய விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக் குழுவினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
வெனிசுலா எல்லையில் அமைந்துள்ள இந்த முகாமில் நடந்த தாக்குதலில் மேலும் 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜனாதிபதி அல்பர்டோ டி லா எஸ்பிரிலா பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதால், அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.