
சீனாவின் செங்டு நகரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தன்வி பத்ரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
17 வயதுக்குட்பட்டோர் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் தன்வி பத்ரி 11-15, 15-10, 15-12 என்ற செட் கணக்கில் சகநாட்டு வீராங்கனையான ஷைனா மணிமுத்துவைத் தோற்கடித்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ஆதித்யா சிங் நேகி, தன்மய் வர்மா ஜோடி வெண்கலம் வென்றது.