
சீனாவின் மொகி நகரில் நடைபெற்று வரும் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.