
இஸ்லாமாபாத்தில் தொழில்நுட்ப ஆர்வலர் எஹ்சான் ஜாஃபர் சோதித்த ஓட்டுநர் இல்லா கார், தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த போலீஸ் வேன் மீது மோதியது.
இந்த விபத்து குறித்துப் பேசிய பத்திரிகையாளர் முஹம்மது ஆலிஜா, இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்றும், இது ஒரு எச்சரிக்கை முயற்சி என்றும் விளக்கமளித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்திய நடிகர் ரன்விர் ஷோரே உள்ளிட்ட பலரும் பாகிஸ்தானின் தொழில்நுட்ப முயற்சி குறித்து நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.