
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்மன்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படும் ஸ்ரேயா சரண், ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சிவாஜி படத்திற்குப் பிறகு 19 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் ஸ்ரேயா மீண்டும் இணைந்துள்ள நிலையில், அவர் சிறப்புப் பாடல் ஒன்றிற்கும் நடனமாட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.