
கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவிருந்த செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் அன்டிகுவா பால்கன்ஸ் இடையேயான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், நெவிஸ் பேட்ரியாட்ஸ் பேட்டிங் செய்யவிருந்த போது மழை குறுக்கிட்டது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கிய இந்த 14-வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.