
ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க, சந்தேகத்திற்குரிய UPI பரிவர்த்தனைகளின் போது 'Yes/No' பாப்-அப் உறுதிப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த வங்கிகள் பரிந்துரைத்துள்ளன.
பெரிய தொகை பரிமாற்றம், புதிய நபர் அல்லது புதிய சாதனத்தைப் பயன்படுத்தும் போது மட்டுமே இந்த எச்சரிக்கை திரை தோன்றும்.
தினசரி சிறிய தொகை மற்றும் மளிகைக் கடை பரிவர்த்தனைகளுக்கு இந்த புதிய பாதுகாப்பு விதிமுறை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.