தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளதால், வரும் அக்டோபர் மாதம் முதல் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தனியார் நிறுவனங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மின் கணக்கீட்டுப் பணிகளில் ஏற்பட்டுவரும் காலதாமதத்திற்கு தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணியாளர் சங்கங்களின் எதிர்ப்புகளுக்கு இடையில் இத்துறையின் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் முடிவு ஊழியர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.