
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி முன்னேறியுள்ளது.
இன்று நடைபெற்ற 2-வது சுற்றுப் போட்டியில், பிரான்சின் கிறிஸ்டோ போபோவ் - டோமா போபோவ் ஜோடியை 21-17, 22-24, 21-9 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது.
இந்தத் தொடர் வரும் செப்டம்பர் 6-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தும் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.