
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகளிடமிருந்து முறைப்படி நோட்டீஸ் வந்தால் நாடாளுமன்ற விதிப்படி முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்குவதற்கான நடைமுறையானது உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கான நடைமுறையைப் போன்றது என அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவராதது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் 85-வது பிரிவு விளக்கமளிப்பதாக அவர் கூறினார்.