
திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்க முயன்றதாக இல்லாத ஒரு கதையைச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்ப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அவர் சமூக வலைதளங்களில் காணொளி வெளியிட்டுள்ளார்.
தாராபுரத்தில் வழக்கறிஞர் எஸ்.சுகன்யாவுக்கும், மதுராந்தகத்தில் இ.பரந்தாமனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.