
கள்ளக்குறிச்சி மாவட்டம் வைப்பாளையத்தில், மணல் கடத்தல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த சமூக ஆர்வலர் ரமேஷின் வீட்டில் 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.
ரமேஷின் மகள் அக்ஷயா மற்றும் சித்தி பாக்கியலட்சுமி ஆகிய இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பல் மீது திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் தாக்கிய 15 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.