
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களில் சுமார் 2 சதவீத மக்களுக்கு 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' எனும் ஆபத்தான பின்விளைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு மண்டலம் அளவுக்கு அதிகமாக எதிர்வினையாற்றுவதால் ரத்தக்குழாய்களில் கசிவு ஏற்பட்டு திரவம் நுரையீரலில் தேங்குவதோடு, ரத்த அழுத்தம் திடீரென குறைந்து அதிர்ச்சி நிலைக்கு வழிவகுக்கும்.
காய்ச்சல் கண்டறியப்பட்டு 5 முதல் 6 நாட்களுக்குப் பிறகு தோன்றும் இந்த அறிகுறிக்கு உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நரம்பு வழி திரவங்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்க வேண்டும்.