
பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி அரையிறுதியில் மத்திய மண்டல அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிழக்கு மண்டல அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கிழக்கு மண்டல வீரர் முகேஷ் குமார் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
159 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய கிழக்கு மண்டல அணி, கேப்டன் இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்த உதவியுடன் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.