/polimer-news/media/media_files/2026/11/02/knnehru-2026-11-02-12-20-56.jpg)
ரூபாய் 634 கோடி லஞ்ச புகார் விசாரணையை திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எதிர்கொண்டே ஆக வேண்டும் எனக்கூறி, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதில் 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டதாக புகார் எழுந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூன் 5 ஆம் தேதி கே.என்.நேரு உள்ளிட்ட 12 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு தடை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.