
ஆகஸ்ட் 23-ல் தொடங்கவுள்ள துலீப் டிராபி 2026 தொடருக்கான ஈஸ்ட் ஜோன் அணியின் துணை கேப்டனாக 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
இஷான் கிஷன் தலைமையிலான இந்த அணியில், சர்வதேச அனுபவம் வாய்ந்த முகமது ஷமி மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முக்கிய வீரர்களான ரியான் பராக் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் அறுவை சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வருவதால், இந்தத் தொடரில் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.