
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவான 'ஒன்ஸ்மோர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ரிலீஸையொட்டி, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தனது நீண்ட கால உழைப்பு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
படம் குறித்த விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பு இன்று மாலை தெரியவரும் நிலையில், தயாரிப்பாளர் தனது பல வருட காத்திருப்பு முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.