
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொண்டுவருவது குறித்த சாத்தியக்கூறுகளை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விவரித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக சிவம் துபேவை மட்டும் வழங்கினால் மும்பை அணி சம்மதிக்காது என்றும், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவையும் சேர்த்து கேட்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆயுஷ் மாத்ரேவை வழங்க விரும்பவில்லை என்றால், சிவம் துபேவுடன் நாதன் எல்லிஸ் மற்றும் உர்வில் படேல் ஆகியோரைச் சேர்த்து மாற்றுத் திட்டமாக வழங்கலாம் என அவர் தெரிவித்தார்.