
சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஃபார்மில் உள்ள விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல், தனது பேட்டிங் திறனை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கடந்த போட்டிகளில் 44, 6, 14, 13, 0, 2 மற்றும் 19 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ஜூரல், இலங்கை தொடரில் சொதப்பினால் தனது இடத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.
ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில், மாற்று வீரராக சர்பராஸ் கான் தயாராக இருப்பதால் ஜூரலுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.