
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விதிகளை மீறி செயல்படும் 129 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
2026-ல் வெளியான தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை 2019-ல் இருந்த 14.2 சதவீதத்திலிருந்து 23.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் டாஸ்மாக் வருவாய் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் உள்ள நிலையில், இது மக்களின் சேமிப்பு மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக அண்ணாமலை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.