உலக அளவில் காசநோயால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆண்கள் என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
14 நாடுகளைச் சேர்ந்த 22,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஆண்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமல்ல, மாறாக அவர்கள் வாழும் சூழலே தொற்றுக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
காசநோய் பாக்டீரியா பரவலைத் தடுக்க வேலை செய்யும் இடங்களில் காற்றோட்ட வசதியை மேம்படுத்துவதும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்வதும் அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.