
உள்நாட்டில் மிளகு உற்பத்தி குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை அதிகரித்துள்ளதாலும் மிளகு விலை கிலோவுக்கு 724 ரூபாயாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு சந்தையில் தரம் பிரிக்கப்படாத மிளகு கிலோ 704 ரூபாய்க்கும், தரம் பிரிக்கப்பட்ட மிளகு 724 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இலங்கையில் மிளகு உற்பத்தி அதிகரித்துள்ளதால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் மிளகு தேவையை ஓரளவு சமாளித்தாலும், பண்டிகை காலத்தில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.