
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'சர்தார் 2' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மாளவிகா மோகனனை 'நம்ம ஊர் மோனிகா பெலூச்சி' என கார்த்தி புகழ்ந்து, அவரது கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரித்துள்ள இப்படத்தில், ஆஷிகா ரங்கநாத் ஒரு சிறந்த நடிகையாக மாற்றப்பட்டுள்ளதாக கார்த்தி தெரிவித்தார்.