
இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் உள்ள கோட்டா கோட்ட முன்பதிவு மையங்களில் ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் பெற டோக்கன் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு நிலையத்தில் ஏசி தட்கல் முன்பதிவுக்கு 10 டோக்கன்களும், ஏசி அல்லாத தட்கல் முன்பதிவுக்கு 15 டோக்கன்களும் வழங்கப்பட்டு, அதன் வரிசை எண் அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
இந்த புதிய நடைமுறை ரயில் நிலைய கவுண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், IRCTC ஆன்லைன் முன்பதிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.