
கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து, தெலுங்கனூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் அகழாய்வு நடந்த இடங்கள் நீரில் மூழ்கின.
தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் மனித எலும்புக் கூடுகள், முதுமக்கள் தாழி, இரும்பிலான எஃகு வாள், கத்திகள், ஈட்டிகள் மற்றும் கல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அணை நீர்மட்டம் உயர்வதற்கு முன்பே தெலுங்கனூர் பகுதியில் அகழாய்வுப் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாகவும், தற்போது மாங்காடு பகுதியில் மட்டுமே பணிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.