
டிஎன்பிஎல் போட்டியின் போது டக்-அவுட்டில் செல்போன் பயன்படுத்தி காதலிக்கு மெசேஜ் அனுப்பிய தமிழக வீரருக்கு பிசிசிஐ ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
விசாரணை நடைபெற்று வருவதால் வீரரின் பெயர் வெளியிடப்படவில்லை, அவர் 2025-26 ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடிய இடதுகை பேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி நேரத்தில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த தடை உள்ள நிலையில், விதிமீறலில் ஈடுபட்ட வீரருக்கு அபராதத்துடன் இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.