
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் தினந்தோறும் 3,500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்ததால் பயிர்கள் காய்ந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது போல, தமிழகத்திலும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்து அரசு ஆலோசனைகளை நடத்தி தீர்வு காண வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.