
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்குச் சொந்தமான சென்னை கிழக்கு கடற்கரை சாலை சொத்து வழக்கில், சமரசப் பேச்சு மூலம் தீர்வு காண ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தராக நியமித்துள்ளது.
1988-ல் வாங்கப்பட்ட இந்த நிலத்திற்கு 37 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரசேகரனின் வாரிசுகள் உரிமை கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
போனி கபூர் குடும்பத்தினர் சமரசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சமரசத் தீர்வு எட்டப்படாத பட்சத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 18-க்கு ஒத்திவைத்தது.