
நைஜீரியாவின் நைஜர் மாகாணம் டிகாரா மாவட்டத்தில் உள்ள கெபன்யா கிராமத்தில், துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் 60 பொதுமக்களை நேற்று முன்தினம் மதியம் கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிராமத்தில் இருந்த இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்தவர்கள் என்று பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர், கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.