
2.5 லட்சம் முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ.20,000 கோடி மோசடி செய்த சுபாஷ் சர்மாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமறைவாக உள்ள சுபாஷ் சர்மா மற்றும் அவரது உறவினர்களின் சொத்துகளை உடனடியாகப் பறிமுதல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரிக்க இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.