
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தீவிர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.
கீவ் நகரில் 350 அவசரகால பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், போரிஸ்பிலில் பகுதியில் மட்டும் 4 பேர் கொல்லப்பட்டு 13 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மின்சாரமின்றி தவித்து வருவதாகவும், ரயில்வே பணிமனை உள்ளிட்ட குடியிருப்புகள் கடும் சேதமடைந்துள்ளதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.