
உள்ளீட்டு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதால், தனது கார் மாடல்களின் விலையை 1.2 சதவீதம் வரை உயர்த்துவதாக ஸ்கோடா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலையேற்றமானது அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதோடு, மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ. 20,000 வரை அதிகரிக்கிறது.
இதனிடையே, புதிய அம்சங்களுடன் கூடிய ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அக்டோபர் 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.