
புதன்கிழமை வர்த்தக முடிவில் இந்தியப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 187 புள்ளிகள் சரிந்து 77 ஆயிரத்து 966 புள்ளிகளில் நிறைவடைந்தது.
நிப்டி 35 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 435 புள்ளிகளிலும், பின்நிப்டி 5 புள்ளிகள் சரிந்து 26 ஆயிரத்து 426 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
அதே சமயம் பேங்க் நிப்டி 439 புள்ளிகள் உயர்ந்து 57 ஆயிரத்து 885 புள்ளிகளிலும், மிட்கேப் நிப்டி 42 புள்ளிகள் அதிகரித்து 15 ஆயிரத்து 32 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவு பெற்றன.