மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழுவை அமைப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த ஊதிய மாற்றத்தின் மூலம் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் கணிசமாக உயரும் என்றும், ஓய்வூதியதாரர்களுக்கும் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதியக் குழு அமலாக்கத்திற்கு முன்னதாக, பதவி உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் MACP தீர்ப்புகள் ஊழியர்களின் ஊதிய கட்டமைப்பில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.