
ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் யூத் டெஸ்ட் போட்டியில் இளம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் சார்பில் முதல் இன்னிங்சில் விளையாடிய லக்சயா 240 ரன்களும், மோஹித் 92 ரன்களும் குவித்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை 229 ரன்களுக்கு சுருட்டிய இந்திய தரப்பில் யாஷ்பர்தன் 6 விக்கெட்டுகளையும், இஷான் ஓம் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.