
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப் 17) காலை மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட 1,008 லிட்டர் கங்கை நீர் உட்பட 7 புண்ணிய நதிகளின் புனித நீர் 12 கோபுரங்களிலுள்ள கலசங்களுக்கு ஊற்றப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.