
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 'கொனார்க்' என்ற புதிய மின்சார ஸ்கூட்டரை இசட் மற்றும் எஸ் ஆகிய இரு மாடல்களில் ரூ. 1 லட்சத்திற்குள் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்கூட்டர் 2.1 முதல் 4.7 கி.வாட்.ஹார் வரையிலான நான்கு விதமான பேட்டரி தேர்வுகளில் கிடைப்பதுடன், முழு சார்ஜில் 80 முதல் 160 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டது.
இதற்கு 10 ஆண்டுகள் அல்லது 10 லட்சம் கி.மீ வரை உத்தரவாதம் வழங்கப்படுவதாகவும், 4 முதல் 6 மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.