Economy
ஸ்டேட் வங்கி லாக்கரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயம்

ஸ்டேட் வங்கி லாக்கரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயம்

Dinamalar2h
THE BRIEF
1

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில், ஸ்டேட் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமானதாக ராஷ்மி அரோரா என்ற பெண் புகார் அளித்துள்ளார்.

2

2003-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 23-ஆம் எண் லாக்கரை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் திறந்தபோது நகைகள் இல்லாததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

3

வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லாததால் லாக்கர் விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கிளை மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.