
பொதுத்துறை வங்கிகளின் ஜூன் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்ததால், நிப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 4 சதவீதம் வரை உயர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவற்றின் சொத்து தரம் சீரடைந்து வாரா கடன் கணிசமாகக் குறைந்துள்ளது.
முதலீட்டாளர்கள் தற்போதுள்ள பங்குகளை விற்காமல் 'ஹோல்டு' செய்யலாம் என்றும், சந்தை இறங்கும்போது புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.