
அமெரிக்காவின் சிறுவணிகங்களுக்குச் சேவை வழங்கும் 'புளுவைன்' டிஜிட்டல் வங்கி, வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த 80 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
இரவு 9:30 மணியளவில் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நீடித்த கூகுள் மீட் காணொளி அழைப்பு வாயிலாக இந்த அதிரடிப் பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த செயல்திறன் கிடைக்கவில்லை என்றுகூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.