
கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,504 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 93.55 அடியாக உள்ளது.
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 18.166 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதாக நேற்று இரவு 8 மணி நிலவரப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடகு மாவட்டம் மற்றும் கேரளாவின் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் மழையினால் கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.